உலக சுகாதார நாளை முன்னிட் சிறப்பு ஒன்று கூடல் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன்கிழமை (02) அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
அமெரிக்க சான்போட் (SANFORD) மருத்துவ கல்லூரியின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை பேராசிரியரும் வைத்திய நிபுணருமாகிய தவம் தம்பிப்பிள்ளை கலந்து சிறப்பித்தார்.
ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வை ஆசிரிய மாணவி தர்மினி சம்பத்குமார் முன்னிலைப்படுத்தினார் .
டேவிட் லிஜானி அதிதி அறிமுக உரையை ஆற்றினார். தினேஸ் கௌசியா ஆரோக்கியமான வாழ்விற்கு கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் ஒழுக்கங்கள் என்ற பொருளில் உரை ஆற்றினார்.
ஆசிரிய மாணவி நிரோஜன் கௌசிகா தயாரித்த உலக சுகாதார நாளை ஒட்டிய விவரண படம் காட்சிப்படுத்தப்பட்டது.
பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் முதன் முதலில் தாய் ஒருவரின் சிறுநீரகத்தைப் பெற்று அவரது மகளுக்கு பொருத்தி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதனை கௌரவிக்கும் வகையிலும் கலாசாலைக்குரிய திறன் பலகை (Smart Board) வகுப்பறை அமைவதற்கு உறுதுணை புரிந்த வகையிலும் கலாசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.