இந்துமத பீடத்தின் கோரிக்கை

19 0

பௌத்த இந்து உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நிரலை புதுவருடத்தில் ஏற்படுத்த வேண்டும். அமைச்சர் சந்திரசேகரிடம் இந்து மத பீடம் கோரிக்கை  சித்திரை புத்தாண்டு பௌத்த இந்து மக்களிடம் கொண்டாடப்படுகின்றது . இந்த புத்தாண்டு வருடம் எப்பொழுதும் தமிழ் சிங்கள மக்களிடையே உறவு பாலத்தை ஏற்படுத்தும் வண்ணமாக இவ் வருட பிறப்பு நிகழ்கின்றது.

இனங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செயல்பட்டு வருகின்றார்.  அதேபோன்று மதங்களுக்கிடையே இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிவகைகளின் ஊடாக இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு இதுவும் ஒரு ஆரம்ப பணியாக அமையும்.

இந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரிடம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தேசமானிய விருது பெற்ற கரவெட்டி தர்மகுலசிங்கம் அவர்களின் பாராட்டு விழாவின் போது அமைச்சரிடம் பாபுசர்மா இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வண்ணம் பௌத்த இந்து உறவை மேம்படுத்தும் வண்ணம் கலாச்சார நிகழ்வை ஏற்படுத்தி ஒரு தாய் மக்கள் உணர்வு அம்சமாக இதை ஒரு ஆரம்பமாக செய்ய வேண்டும் இது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன ஐக்கியம் முக்கியமானது என பாபுசர்மா வலியுறுத்தி கூறியிருந்தார்.  இதனை அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் நிச்சயமாக இதற்கான ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார்.