துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

15 0

சொட் கன் வகை துப்பாக்கி மற்றும் ரி-56   துப்பாக்கி  ரவை  10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்   திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது டன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றம் பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட   இந்த நடவடிக்கையின் போது அனுமதி பத்திரம் இல்லாத  ‘பொர தொளகாய் சொட் கன்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கியும்  ரி 56 வகை  துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மலையடிக்கிராமம் 04 பகுதியைச் சேர்ந்த66 வயதுடைய சந்தேக நபர் ஓய்வு பெற்ற முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஆவார்.

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் பணிப்புரைக்கமைய கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் அறிவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றம் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸாரினால் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது டன்  இச் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.