கிரான்குளத்தில் கார் விபத்து

12 0

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து , கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காரில் பயணம் செய்த சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு  உயர் மின் அழுத்த  மின்சாரக் கம்பம் உடைந்து  விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.