அமெரிக்காவின் பரஸ்பர வரி அமலானால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு?

18 0

 ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வர உள்ள, அமெரிக்க பரஸ்பர வரிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் விவசாயப் பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்​கா​வின் அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்​கள் நாட்​டின் பொருட்​களுக்கு இந்​தியா உள்​ளிட்ட பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு பதிலடி​யாக, அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பிற நாடு​களின் பொருட்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்​ரல் 2-ம் தேதி முதல் வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். தற்போது, அமெரிக்கா வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இதையடுத்​து, இது தொடர்​பாக உலக நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன. இந்​நிலையில், அதிபர் ட்ரம்ப் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும். என்ன நடக்​கிறது என்று பார்ப்​போம்” என்​றார். இதனால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கக் கூடிய வரி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்க பால் பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன் 50 சதவீத வரியும், அமெரிக்க அரிசி மீது ஜப்பான் 700 சதவீத வரியும், அமெரிக்க விவசாய பொருட்களுக்கு மீது இந்தியா 100 சதவீத வரியும், அமெரிக்க வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா 300 சதவீத வரியும் விதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக, நீண்ட காலமாக இந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதித்து, அமெரிக்க தொழிலாளர்களை ஏளனம் செய்கிறது. இதனால், அமெரிக்க பொருட்களை அந்தச் சந்தைகளில் இறக்குமதி செய்வது சாத்தியமற்ற ஒன்று.

இதனால், ஏராளமான அமெரிக்கர்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனால், வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, அயர்லாந்து, ஜெர்மனி, தைவான், ஜப்பான், தென் கொரியா, கனடா, இந்தியா, தாய்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.