காணாமல் போனோர்களை உறுதிசெய்து, இந்த வருடத்துக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் குறித்து பிழையான தகவல்களை வழங்குவோருக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
காணாமல் போனோருக்கான சான்றிதழ்கள் இந்த வருடத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் பணியகம் அமைக்கப்பட்டு அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படவுள்ளன. அதன்போது தவறான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.