இந்தியாவின் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விரைவாக பரவியது. மேலும், அந்த தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், தீயணைப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.