சாமர சம்பத்தின் விளக்கமறியலில் நீட்டிப்பு

18 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

மூன்று வழக்குகள் தொடர்பில் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், கடந்த 27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட போதும், ஒரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.