கட்டுகஸ்தோட்டை மர ஆலையில் பாரிய தீ

12 0

கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள மர ஆலை ஒன்றில்  செவ்வாய்க்கிழமை (01)  அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த மர ஆலைக்கும் அங்கிருந்த பொருட்களுக்கும் பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளது.

இம்மர ஆலையில் இருந்த  பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து நாசமாகி உள்ளதுடன்  உற்பத்தி செய்யப்பட்ட  பொருட்கள் உட்பட  பொருட்கள் பலவும்  எரிந்து பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,  கட்டுகஸ்தோட்டை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.