புதிய போக்குவரத்து முறையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த திட்டம்

261 0

கொழும்பு நகரப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட போக்குவரத்து முறையை வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வீதி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் போக்குவரத்து சட்டத்தை மீறும் சாரதிகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்துகொள்ளும் விஷேட போக்குவரத்து முறையொன்று நேற்றைய தினம் முழுவதும் கொழும்பு நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி கூறினார்.

அதன்படி நேற்றைய தினம் முழுவது இதனுடன் தொடர்புடைய 79 வழக்குகள் பெறப்பட்டுள்ளது.

இடது பக்கத்தால் பயணிக்காமை, வலது பக்க சட்டத்தை மீறுதல், தொலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை செலுத்துதல் உள்ளிட்ட தவறுகள் தொடர்பில் இவ்வாறு வழக்கு பதிவு செய்து கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.