தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான இராஜநாயகம் பாரதிக்கான அஞ்சலி கூட்டம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (30) சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் லுட்சேர்ன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்