வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது !

16 0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி இன்று ஞாயிற்றுகிழமை (30)  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துபாயில் பணிபுரிந்து வந்த அக்குரணை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்ப, துபாயிலிருந்து சிகரெட்டுகளை பெற்றுகொண்டு ஓமானின் மஸ்கட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து, இன்றையதினம் 05.10 மணிக்கு ஓமான் ஏர் விமானம் OV-437 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் அவரது பயணப்பையில் மறைத்து வைத்திருந்த 03 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  “பிளாட்டினம் செவன்” சிகரெட்டுகள் அடங்கிய 100 கார்டூன்கள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு  பிரிவினரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர் பொலிஸ் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.