முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்டது தொடர்பாக அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சர் சாகல ரத்னாயக்க இது தொடர்பில் விளக்கமளித்தார். பாதுகாப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையை கருத்திற் கொண்டே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் 26 பேர் உள்ளிட்ட 229 பொலிஸ் அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக இணைக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஆய்வின் படி அத்தியவசியமற்ற அதிகாரிகள் குழுவொன்றை மாத்திரம் மீண்டும் திரும்ப பெற்றுக் கொண்டதாக அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஷேட நபர்கள் சம்பந்தமாக அவ்வப்போது செய்யப்படுகின்ற ஆய்வுகளின்படி பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளின் அளவு அதிகரிப்பு அல்லது குறைப்பு செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.