பூகம்பம் தாக்கி பல மணிநேரங்களின் பின்னர் இடிபாடுகளிற்குள் இருந்து பெண் உயிருடன் மீட்பு

21 0
image

மியன்மாரின் மண்டலாயில் பூகம்பத்தினால் முற்றாக தரைமட்டமான கட்டிடமொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளாகள் பெண் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

பூகம்பம் தாக்கி 30 மணித்தியாலங்களின் பின்னர் இந்த பெண் உயிருடன் மீட்கப்படுவதை பார்த்ததாக ஏஎவ்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

முப்பது வயது பியுலே கைங் என்ற பெண்ணே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்கைவிலா கட்டிடதொகுதியிலிருந்து அவரை உயிருடன் மீட்டு ஸ்டிரெச்சரில் வெளியே கொண்டு வந்தனர் என ஏஎவ்பி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவரை பார்த்ததும் கணவர் கட்டித்தழுவியுள்ளார் உயிடன் மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உயிருடன் இருப்பார் என நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லைஎன இடிபாடுகளிற்குள் புதையுண்ட தனது மனைவி உயிருடன் வெளியே வருவதற்காக காத்திருந்த தருணத்தில் கணவர் தெரிவித்துள்ளார்.