12 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்

19 0
நாட்டில் இன்று ஞாற்றுக்கிழமை (30) 12 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும்  வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.