பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி, ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, நிக்கோலஸுக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.
இந்த வழக்கில், அரசு தரப்பு சட்டத்தரணிகள் சார்க்கோஸிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 300,000 யூரோக்கள் அபராதமும் விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்கள்.
அத்துடன், அவரது அமைச்சரவையில் பணியாற்றிய சில அமைச்சர்கள் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.