
இது குறித்து சிஎன்என் தெரிவித்துள்ளதாவது
வெள்ளிக்கிழமை பூகம்பம் தாக்கியது முதல் மியன்மாரின் மண்டாலயுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது கடினமாக உள்ளது.இதன் காரணமாக பூகம்பம் தாக்கிய பகுதியில் வசிப்பவர்கள் சந்தித்தள்ள அழிவின் அளவை அறிந்துகொள்வது கடினமாக உள்ளது.
1.5 மில்லியன் மக்களை கொண்ட இந்த நகரமே பூகம்பம் தாக்கிய பகுதிகளில் அதிக சனத்தொகைகொண்ட நகரம்.இது முன்னர் மன்னர்களின் தலைநகரமாக காணப்பட்டது,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும்,கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும் இங்கு காணப்படுகின்றன.
சிஎன்என் அங்கு வசிக்கும பெண்ணொருவரை தொடர்புகொண்டது,அவர் தனது குடும்ப உறுப்பினர் பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் சிக்கிய அந்த பயங்கரமான தருணங்களை நினைவுகூர்ந்தார்- அவர் தனது பெயரை குறிப்பிடவிரும்பவில்லை.
அதுமிகவும் உக்கிரமானதாகவும் வேகமானதாகவும் காணப்பட்டது,என தெரிவித்த அவர் தனது குழந்தைக்கு உணவு செய்வதற்காக தண்ணீரை சுடவைத்துக்கொண்டிருந்தபோது பூகம்பம் தாக்கியது என அவர் தெரிவித்தார்.
வீட்டின் சுவர் இடிந்து அருகிலிருந்த எனது பாட்டியின் மீது விழுந்தது,அவர் இடிபாடுகளால் மூடப்பட்டார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
வேலியும் கதவின் மேல் விழுந்ததால் கதவை திறக்க முடியவில்லை,நான் சத்தமிட்டேன் வீதியிலிருந்து வந்த கணவர் ஒருவாராக கதவை திறந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளிற்குள் சிக்கியவரை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எங்கள் வீட்டின் கூரைகளில் வெடிப்பு காணப்படுகின்றது,எங்கள் அயலில் உள்ள அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.