புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பணி இடைநிறுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஆவார்.
இவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தராக இருந்த போது ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகி கிராம உத்தியோகத்தர் பதவியிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.