மருதானை சோப்பேவின் மகன் பிணையில் விடுதலை

22 0
கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருதானை சோப்பேவின் மகன் என்று அழைக்கப்படும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷவை 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய  கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கித்சிறி ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக காணியின் உரிமையாளருக்கும் அவரது மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கித்சிறி ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.