கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்த பிற்பாடு கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடுகள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் படித்த பாடசாலைச் சூழலைத் தூய்மைப்படுத்தி பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசி மகிழ்ந்தனர்.
பரீட்சை முடிவடைந்த பிற்பாடு பாடசாலை சீருடைகளில் மைகளை தெளித்து விளையாடும் மாணவர்கள் மத்தியில் கோணாவில் மகா வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாட்டையும் அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.