மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கட்டுப்பகுதியில் இருந்து கேரள கஞ்சா போதைப் பொருள் தொகுதி ஒன்று மட்கப்பட்டுள்ளது.
பேசாலை காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மன்னார் – போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது இந்த போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
அங்கு 9 பொதிகளில் 18 கிலோ 600 கிராம் எடை கொண்ட போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.