ஐந்து மாடிக்கட்டிடமொன்று கண்முன்னால் இடிந்து விழுந்தது

13 0
மியன்மாரின் மண்டலாய் நகரத்தினை பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து ஐந்துமாடிக்கட்டிடமொன்று தங்கள் கண்முன்னால் இடிந்துவிழுந்தது என அதனை நேரில் பார்த்தவர்கள் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தை சேர்ந்த ஒருவர் ஐந்துமாடிக்கட்டிடம் எனது கண்முன்னால் இடிந்து விழுந்ததை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.

அனைத்தும்குலுங்கதொடங்கியதும் நாங்கள் வீட்டிலிருந்து வெளியே ஓடினோம் என தெரிவித்துள்ள அவர் எனது நகரில் அனைவரும் வீதியில் நிற்கின்றனர் வீடுகளிற்குள் செல்வதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை என தெரிவித்துள்ளார்.

டெட் நையிங் ஓ என்ற மற்றுமொரு நபர் மண்டலாயி;ல் தேநீர் கடையொன்று இடிந்து விழுந்தது,உள்ளே பலர் சிக்குண்டுள்ளனர் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை,நிலைமை மிக மோசமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

இதுவரை மியன்மார் அதிகாரிகள் உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.