பதுளை , ஊவாபரணகம, லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவி ஒருவர் பரீட்சை நிலையத்தில் வைத்து திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த மாணவி லுனுவத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த போது பரீட்சை நிலையத்தில் வைத்து திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
இதனையடுத்து இந்த மாணவி உடனடியாக வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் பரீட்சை நிலையத்திற்கு சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.