பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனம்

8 0

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.