யாழில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது

17 0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(27) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் – தைலங்கடவை பகுதியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 4 அடி 10 அங்குலம் கொண்ட கஞ்சா செடியும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.