நேற்று (26)பிரான்ஸ் விமானப்படையின் 2 ஜெட் ரக விமானங்கள் நேற்றைய தினம் பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது. கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே நேற்று பயிற்சியின்போது பிரான்ஸ் விமானப்படை ஆல்பா ஜெட் விமானங்கள் இரன்டு நடுவானில் மோதிக்கொண்டன.
மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
26, 2025 விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் பெரிய சேதங்கள் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Two aircraft from a French aerobatic team have collided mid-air, with their wings destroyed before plummeting vertically and exploding.
The pilots ejected and survived, with one being transported to the hospital.#Aircraft #French #collided #BREAKING #BreakingNews pic.twitter.com/AHaCZEyLrf
— Indian Observer (@ag_Journalist) March 26, 2025