தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், காட்டுத் தீ பரவும் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இதுவரையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக எந்தவொரு அறிக்கையும் கிடைக்கவில்லை என்று சியோலிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 2 735 2966, 2 735 2967, 2 794 2968 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் காட்டுத் தீ வேகமாக பரவியதில் சுமார் 27,000 இற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய அரசாங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.