18ஆவது ஐ.பி.எல் சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம்(26) 6ஆவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில், முன்னாள் செம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ்(RR) அணியுடன் மோதுகின்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதேபோல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் தோற்றது.
விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் ‘இம்பேக்ட்’ வீரராகவே பயன்படுத்தப்பட்டார்.
இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் அணித்தலைவராக தொடரவுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.மற்றொரு போட்டியில் முடிவில்லை.
இந்நிலையில் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது, இரு அணிகளில் வெற்றிப்பெறும் அணி தனது முதலாவது வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்யும்