மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

13 0

காலி – மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள ரயில் மார்க்கத்தில் நேற்று திங்கட்கிழமை (24) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொட்டகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

இவர் கொழும்பிலிருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி காயமடைந்துள்ள நிலையில் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்டப்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.