ஐ.நா பொதுச் செயலாளர் போட்டிக்கு அவுஸ்ரேலியர் பரிந்துரை

313 0

1459522682427ஐக்கிய நாடுகளின் அடுத்த பொதுச்செயலாளருக்கான போட்டிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் தொழில் அமைச்சர் கெவின் ரட்டை பரிந்துரை செய்ய அந்த நாட்டின் அரசாங்கம் மறுத்துள்ளது
தம்மை பொறுத்தவரை, Kevin Rudd இந்த பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்று கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதமர், Malcolm Turnbull தெரிவித்துள்ளார்.
எனினும் ஏன் அவர் தகுதியற்றவர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
இந்தநிலையில் தாம் எவரையும் குறித்த பதவிப்போட்டிக்கு பரிந்துரைக்கப்போவதில்லை என்றும் Malcolm Turnbull   குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பேன் கீ மூன் இந்த வருட இறுதியுடன் தமது பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளார்.
இந்தநிலையிலேயே புதிய செயலாளருக்கான பரிந்துரைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.