தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரோனிக்ஸின் இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக அவரது 63 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமாகியுள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவர் சாம்சங்கின் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
இவர் 1988 ஆம் ஆண்டு சாம்சங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஹான், தொலைக்காட்சி வியாபாரத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சுமார் 19 வருடங்களாக உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக சாம்சங்கின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
2022 ஆம் ஆண்டு சாம்சங் இலத்திரனியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார்.
தொடர்ந்து அவர், DX பிரிவை வழிநடத்தி, சாம்சங்கின் தொலைக்காட்சி, வீட்டு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் வணிகங்களையும் மேற்பார்வை செய்தார்.
இவ்வாறு சாம்சங் நிறுவன வளர்ச்சியில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. இந்நிலையில் இவரது இழப்பு என்பது சாம்சங் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு எனக் கூறுவதில் தவறில்லை.