தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு சந்தேகநபர் கைது !

16 0
மாத்தறை – தெவிநுவர  பகுதியில்  விஷ்ணு ஆலயத்திற்கு அருகில்  உள்ள சிங்காசன வீதியில்  அண்மையில் இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது ஞாயிற்றுக்கிழமை  (23) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்ள சந்தேக நபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேனுக்கு தீ வைத்த குற்றத்திற்காக மாத்தறைகுற்றப் புலனாய்வுப் பிரிவு பணியகத்தின் அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கந்தர பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர பொலிஸ் மற்றும் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பணியகம் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.