விருதுகள் அறிவிப்பு: ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ ஊர்மிளாவுக்கு ‘நிருத்திய கலாநிதி’

15 0

பிரபல வயலின் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலா நிதி விருதும், நடனக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணா வுக்கு ‘நிருத்திய கலாநிதி’ விருதும் வழங்கப்படுவதாக சென்னை மியூசிக் அகாடமி அறி வித்துள்ளது.

மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி தலைமை யில் அதன் நிர்வாக குழு கூட் டம் நேற்று நடைபெற்றது. இதில், 2025-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி, நிருத்திய கலாநிதி உள்ளிட்ட விருதுகளை பெறும் கலைஞர்கள் தேர்வு செய்து அறி விக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது: இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக் கான விருதுகளுக்கு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்: மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல வய லின் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சங்கீத உலகத்துக்கு எண் ணற்ற கலைஞர்களை கொடுத்த கர்நாடக மாநிலத்தின் ருத்ரபட்ட ணத்தின் இசை பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்.

தனது பாட்டனாகும், வயலின் மேதையுமான ஆர்.கே.வெங்கட்ராம் சாஸ் திரியிடம் இசை பயிற்சியை தொடங்கினார். ‘சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமனிடம் இசை நுட் பங்களை கற்றார். செம்மங்குடி சீனிவாச அய்யர், டி.பிருந்தா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட் டம்மாள் போன்ற தலைசிறந்த இசை மேதைகளுக்கு பக்கவாத் தியமாக வயலின் வாசித்துள் ளார். இசை துறையில் மிக நுட் பமான விரிவுரைகளையும் அவர் நிகழ்த்தி வருகிறார்.

“சங்கீத கலா ஆச்சார்யா விரு துக்கு சியாமளா வெங்கடேஸ் வரன், தஞ்சாவூர் ஆர்.கோவிந்த ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சியாமளா வெங் கடேஸ்வரன், பிரபல கர்னாடக இசை பாடகர் மற்றும் அகில இந் திய வானொலி நிலையத்தின் நிலைய கலைஞர். தவில் மேதை யான தஞ்சாவூர் ஆர்.கோவிந்த ராஜன்லஆண்டு இசைஅனுபவம் கொண்டவர். பல இளம் தவில் கலைஞர்களை உருவாக்கியவர்.

அதேபோல, கதகளி இசை பாடகர் மாதம்பி சுப்பிரமணிய நம்பூதிரி, வீணை வித்வான்கள் ஜே.டி.ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோர் டிடிகே விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இசை அறிஞர் விருதுக்கு, இசை துறை பேராசிரியர் சி.ஏ.ஸ்ரீதரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நாட்டிய குருவான கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, கே.ஜே.சரசா, கலாநிதி நாரா யணன் ஆகியோரிடம் நாட்டி யம் பயின்று, பிரபல பரதநாட் டிய கலைஞராக அறியப்படும் ஊர்மிளா சத்யநாராயணா, ‘நிருத் திய கலாநிதி விருதுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.

‘சங்கீத கலாநிதி’ விருதாளர் 2025 டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 2006 ஜனவரி 1-ம் தேதி வரை நடை பெறும் மியூசிக் அகாடமியின் 99வதுஆண்டுகருத்தரங்க நிகழ்வு களுக்கு தலைமை தாங்குவார். ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் சதஸ் நிகழ்வில் ‘சங்கீத கலாநிதி. சங்கீத கலா ஆச்சார்யா’, ‘டிடிகே’, ‘இசை அறிஞர் விருதுகள் வழங் கப்படும். ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் மியூசிக் அகாடமி யின் 19-வது ஆண்டு நாட்டிய விழாவில் ‘நிருத்திய கலாநிதி’ விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.