கண்டாவளை ரூபன் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (22) கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கழக வீரர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டதுடன், நடைபெறவுள்ள உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.