அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட 121 தொழிற்சங்கங்கள் இன்று சேவைப் புறக்கணிப்பில்

263 0
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒழுங்கு செய்துள்ள நாடுதழுவிய சேவைப் புறக்கணிப்பு இன்று நடைபெறவுள்ளது.
மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த போராட்டத்துக்கு 121 தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 250க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டமளிக்கும் நிறுவனமாக மாலபே மருத்துவ கல்லூரியை அங்கீகரித்துள்ளமைக்கு எதிராகவும், அதனை கலைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இதேவேளை, தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை காலை முதல் 8 மணி முதல் 24 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தொடரூந்து சேவை நேர கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் இந்தப் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.
மாலபே தனியார் மருத்துக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்றையபோராட்டத்தின் காரணமாக தனியார் பேருந்து சேவைகளில் எந்த மாற்றங்களும் இல்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.