கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் குறைந்தது இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், குறைந்தது இரு மாதங்களுக்கு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாசக் கோளாறு காரணமாக பெப்ரவரி 14ஆம் திகதி ரோம் நகரிலுள்ள ஜெமிலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் (88) அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 38 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மருத்துவமனையில் இருந்து திரும்புகிறார்.
நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தபோது இரண்டு முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை போப் சந்தித்தார்.
எனினும், வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்து வந்தார்.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போப் பிரான்சிஸ், இன்று வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.