அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இந்த போராட்டத்தை போய தினத்தின்தான் நடத்திக்கொண்டிருந்தோம் , போராட்டம் வலுப்பெற்ற நிலையில அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத நிலையில, யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள அமைச்சர் 20 ம் திகதி எங்களை அழைத்து,இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார்.
பௌத்த சாசன அமைச்சர்.அவருடைய அலுவலகத்தில் வைத்து ஒரு மக்கள் சந்திப்பை ஒழுங்கு செய்தார், அவர் அங்கு தெளிவாக சொல்லியிருந்த விடயம் மக்களின்காணிகள் என்றால் மக்களிற்கே கையளிக்கவேண்டும் என்று.இது தங்கள் அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையிலே நாங்கள் உறுதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அவரிடம் காட்டியிருந்தோம்.
இது தங்களுடைய விடயங்களிற்கு பொறுப்பானதல்ல காணி அமைச்சிற்கும் பொறுப்பானது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.அவர்களும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கின்றார்கள் இதற்குரிய முடிவை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்க முயல்கின்றோம் என அவர் சொல்லியுள்ள நிலையில அவருடைய அரசாங்கம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக புதிய கட்டிடத்தை திறக்க முயல்வது மன வருத்தத்திற்குரிய விடயம்,
மக்கள் இதனை உணராவிட்டால் இதுபோல பல விடயங்கள் நடக்கும் , சகல மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.