ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

12 0

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (21) கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை  பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அக்குரஸ்ஸ மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில்  வசிக்கும் 36 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவார்.

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து  10 கிராம்  250 மில்லி கிராம் ஹெரோயினும் மற்றையவரிடமிருந்து  05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.