ஒபாமா கெயார் என்ற சுகதாரத் திட்டம் ரத்து

243 0

அமெரிக்காவில் பிரபலமான ஒபாமா கெயார் என்ற சுகதாரத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அமெரிக்க சுகாதார சட்டம் அமுலாக்கப்படுகிறது.

குறித்த சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது டொனால்ட்ட்ரம்ப் முன்வைத்த சட்ட மூலம் வெற்றிபெற்றுள்ளது.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் ஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் நடைபெறும் ஜு.20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர் அங்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.