ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

11 0

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்பொலமுல்ல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் ஹங்வெல்ல  பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாதுக்கை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து  1,044 லீற்றர் கோடா (6 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.