மாத்தளை – கண்டி வீதியில் பலகடுவ, தேதுனு பாலத்தில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.