20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீன் பை பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

280 0

20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீன் பைகளை உபயோகிக்கின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீன்களுக்கு 2006ஆம் ஆண்டு முதலே தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இன்னும் சில உற்பத்தியாளர்கள் தடைசெய்யப்பட்ட பொலித்தீன்களை உற்பத்தி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தரம் குறைந்த பொலித்தீன்கள் தொடர்பில் சுற்றுவளைப்பு தேடுதல்களை தீவிரப்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.