அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜொன்சன் விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்துக்கு முன்னதாக அவர் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசமை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் அவரது இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
மறுசீரமைப்பு செயற்பாடுகளை துரிதப்படுத்த ஊக்கமளிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு அமெரிக்காவே முக்கிய பங்காளியாக இருக்கிறது.
இந்த நிலையில், இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த விஜயம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.