மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால் அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார் இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில்; வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- சந்திவெளி படுகொலை : 4 பேருக்கு மரண தண்டனை
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
110 ஆண்டுகள் ராணியாகவே வாழ்ந்த தெய்வானை
March 4, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்
March 5, 2025 -
அன்னை பூபதி அவர்களின் நினைவுக் கவிதைப் போட்டி 2025
February 24, 2025 -
அன்னை பூபதி நினைவாக உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்- நெதர்லாந்து
February 7, 2025