18 இலட்சம் பெறுமதியான பாடசாலை சீருடைகள் மாயம்

277 0

கஸ்டப்பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக விநியோகிப்பதற்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 18 இலட்சம் பெறுமதியான பாடசாலை சீருடைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் கல்வி வலயத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனவே இதுகுறித்த விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ்.பிரியந்த பிரனாந்து வடமத்திய கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதமளவில் அநுராதபுரம் விவேகானந்தர் தமிழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த சீருடை ஒரு தொகுதி வலயக் கல்வி பணிப்பாளரின் உத்தரவுக்கமைய லொறி ஒன்றில் ஏற்றப்பட்டதாகவும்,எனவே இது தொடர்பான விசாரணைகளை சரியான சாட்சியாளர் முன்னிலையில் விசாரிக்குமாரும் ஆசிரியர் சங்கத்தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.