நாளைய பணிபகிஸ்கரிப்பால் அரசுக்கு இலாபம் – அமைச்சர் மஹிந்த

268 0

நாளைய தினம் சைட்டத்துக்கு எதிராக 121 தொழி;ற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள பணிபகிஸ்கரிப்பால் அரசு இலாபமே தவிர நட்டமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாளைய தினம் இவர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால் தண்ணீர் கட்டணம்,மின்சார கட்டணம் குறையும் இது ஒருவகையில் அரசுக்கு இலாபம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற விவாததத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் குறித்த வேலைநிறுத்தங்களால் அரசியல்வாதிகளோ, பணக்காரர்களோ பாதிக்கப்படுவதில்லை என்றும் அப்பாவி பொதுமக்களே இவற்றினால் பாதிபடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால் அப்பாவி மக்கள் இவர்களை சபிக்கத் தொடங்கியுள்ளதாகவும்,குறித்த வேலைநிறுத்தங்கள் குறித்து அப்பாவி பொதுமக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் மேற்கொள்வதால் ஊடகங்களுக்கும் இதன்போது அமைச்சர் நன்றியும் தெரிவித்தார்.