500 கிலோ எடையுடன் மும்பை வந்த பெண்ணின் எடை குறைந்ததா?

260 0

எகிப்தைச் சேர்ந்த 36 வயதான இமான் அகமது என்றப் பெண் 500 கிலோ உடல் எடை அதிகரித்ததால் மிகவும் கஸ்டத்தை எதிர்நோக்கியிருந்தார்.

இந்தநிலையில்,இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அங்கு அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்மூலம் அவரது உடல் எடை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக இவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ள போதிலும், இவரது உடல் எடையில் மாற்றம் ஏற்படவில்லை என இவரது உறவினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

83 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று மும்பை மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ள இவர் அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாகவும், அவர் புறப்படுவதற்கு முன்பு மும்பை மருத்துவமனையில் இருந்து அவரை அனுப்புவது தொடர்பாக 29 பக்கங்கள் கொண்ட பரிமாற்ற ஆவணம் புர்ஜீல் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதகவும் மும்பை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் குறித்த பெண்ணின்ட நிறை 170 கிலோவாக குறைந்துள்ளதாகவும்,அவரது உறவினர்களின் குற்றச்சாட்டை மன்னிப்பதாகவும் மும்மை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.