இந்த விபத்து நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
களுத்துறையிலிருந்து பயணித்த வேன் ஒன்று வீதியில் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக 15 பேர் கொண்ட குழுவுடன் சுற்றுலாச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.