இலங்கையில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்ட உடன்படிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
1 கிலோவாட் மணிநேரத்திற்கு 7 சென்ட்ஸ் என விலையை மாற்றியமைக்க நாங்கள் முன்வந்துள்ளதாகக் கூறும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை.
இலங்கையுடனான உடன்படிக்கையில் விதிமுறைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்கள் மாறவில்லை.
முன்மொழியப்பட்ட காற்றாலை கருதிட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியிருந்தாலும், இலங்கை எதிர்வரும் காலத்தில் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் நாங்கள் தயாராக இருப்போம் என அதானி குழுமம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.