புகையிரத சாரதிகளும் நாளைய தினம் பணிபகிஸ்கரிப்பில்

286 0

3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8 மணிமுதல் புகையிரத சாரதிகள் சங்கம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

நாளை காலை 8 மணிமுதல் 24 மணிநேர பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குமாறும்,புகையிரத திணைக்களத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு மற்றும் சைட்டத்தை மூடுமாறு கோரிய 3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக இந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொம்பகொட தெரிவித்துள்ளார்.